இங்கிலாந்துடனான 2வது டெஸ்ட் - இரண்டாம் நாள் முடிவில் வெஸ்ட்இண்டீஸ் 272/6

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட்இண்டீஸ் அணி 6 விக்கெட்டுக்கு 272 ரன்கள் எடுத்துள்ளது. #WIvENG
இங்கிலாந்துடனான 2வது டெஸ்ட் - இரண்டாம் நாள் முடிவில் வெஸ்ட்இண்டீஸ் 272/6
Published on

ஆன்டிகுவா:

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நடைபெற்று வருகிறது.

டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. இதனால், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 187 ரன்னில் சுருண்டது.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கேமர் ரோச் 4 விக்கெட்டும், கேப்ரியல் 3 விக்கெட்டும், ஜோசப் 2 விக்கெட்டும், ஹோல்டர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

அதன்பின்னர், முதல் இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிராத்வெயிட் 49 ரன்னிலும், கேம்ப்பெல் 47 ரன்னிலும், ஹோப் 44 ரன்னிலும் அவுட்டாகினர். ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டூவர்ட் பிராட் 3 விக்கெட்டும், மொய்ன்அலி 2 விக்கெட்டும் எடுத்தனர். #WIvENG

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com