

பிரதமர் நரேந்திர மோடி இன்று 68-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங், பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:-
இந்திய அரசியல் வானில் ஒரு துருவ நட்சத்திரமாய் தோன்றி பிரதமராக பொறுப்பெடுத்து, 4 ஆண்டுகளுக்குள்ளாக உலகின் முதல்நிலை நாடாக இந்தியா உருவாக வழிநடத்தி, எடுத்துவைத்த ஒவ்வொரு அடியிலும் வெற்றி முழங்கச் செய்து அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னேறுகிறது என்று ஒவ்வொரு இந்தியனும் தலைநிமிர்ந்து முழங்கவைத்து, உலக நாடுகள் இந்தியாவை வணங்கி வலம்வர வைத்த பிரதமர் நரேந்திரமோடி 68-வது பிறந்த நன்நாளில் (இன்று) அவருக்கு நீண்ட ஆயுளை, நிறைந்த பலத்தையும் அன்னை சக்தி அருள வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.