இங்கிலாந்தின் பிரபல கால்பந்து வீரர் ரூனே கைது: குடிபோதையில் கார் ஓட்டியதாக வழக்கு

இங்கிலாந்தின் பிரபல கால்பந்து வீரரான வேய்ன் ரூனே குடிபோதையில் கார் ஓட்டியதாக போலீசார் கைது செய்து, பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.
இங்கிலாந்தின் பிரபல கால்பந்து வீரர் ரூனே கைது: குடிபோதையில் கார் ஓட்டியதாக வழக்கு
Published on

சர்வதேச கால்பந்து போட்டிகளில் இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னணி வீரராக திகழ்ந்த வேய்ன் ரூனே(வயது 31). இங்கிலாந்து அணிக்காக 119 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ள ரூனே, 53 கோல்கள் அடித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்காக அதிக கோல் அடித்த வீரரான இவர் சமீபத்தில் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தனது சொந்த அணியான எவர்ட்டன் அணிக்கு விளையாடுவதற்காக இந்த முடிவை எடுத்ததாக கூறியிருந்தார்.

இந்நிலையில், செசையர் கவுண்டியில் உள்ள தனது வீட்டின் அருகே குடிபோதையில் கார் ஓட்டிச் சென்றதாக ரூனே மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இன்று அதிகாலையில் விம்ஸ்லோ நகரின் ஆல்ட்ரின்சம் சாலையில் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிவேகமாக காரை ஓட்டிச் சென்றபோது போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர் அவரை கைது செய்த போலீசார் ஜாமீனில் விடுவித்துள்ளனர். மேலும் விசாரணைக்காக ஸ்டாக்போர்ட் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 18-ம் தேதி ஆஜர் ஆகவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com