யமஹா ஃபேஸர் 250: ஸ்பை வீடியோ வெளியானது

யமஹா நிறுவனத்தின் புதிய ஃபேஸர் 250 மாடலின் ஸ்பை வீடியோ யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஃபேஸர் 250 மாடலில் வழங்கப்பட்டுள்ள முழு அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
யமஹா ஃபேஸர் 250: ஸ்பை வீடியோ வெளியானது
Published on

புதுடெல்லி:

இந்தியாவில் யமஹா நிறுவனத்தின் புதிய ஃபேஸர் 250 மாடலின் வெளியீடு குறித்து எவ்வித தகவலும் வெளியாகாத நிலையில் ஃபேஸர் 250 ஸ்பை வீடியோ யூடியூப் தளத்தில் பதிவேறே்றம் செய்யப்படடுள்ளது. மேலும் இந்த மாடல் எதிர்பார்க்கப்பட்டதை விட விரைவில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

டூயல் ஹெட்லைட் செட்டப் எல்இடி இலுமினேட்டர் நீக்கப்பட்டு இம்முறை FZ25 மாடலில் வழங்கப்பட்டதை போன்று கொண்டிருக்கிறது. மோட்டார்சைக்கிளின் முன்பக்கம் முழுமையக மாற்றப்பட்டு, முற்றிலும் வித்தியாசமாக காட்சியளிக்கிறது. புதிய மாடலில் விங் ஸ்டைல் எல்இடி பைலட் மின்விளக்குகள் எல்இடி ஹெட்லைட்டின் கீழ் பொருத்தப்பட்டுள்ளது. 

ஃபேஸர் 250 வடிவமைப்பு மற்றும் ஹார்டுவேர், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட்டல் கிளஸ்டர் உள்ளிட்டவை FZ25 மாடலில் வழங்கப்பட்டதை போன்றே இருக்கிறது. இயந்திர வகையில் புதிய மாடலில் அதிகப்படியான மாற்றங்கள் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனால் புதிய ஃபேஸர் 250 மாடலில் 249சிசி ஏர்-கூல்டு, 4-ஸ்டிரோக், SOHC, 2-வால்வ், ஃபியூயல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட மோட்டார் வழங்கப்படும். இந்த இன்ஜின் 20.9 PS @ 8,000 rpm மற்றும் 20 Nm டார்கியூவினை @ 6,000 rpm செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. 

யமஹா ஃபேஸர் 250 ஸ்பை வீடியோவினை கீழே காணலாம்..,

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com