கும்பகோணம் கோவிலில் விஜயகாந்த் மனைவியுடன் சாமி தரிசனம்

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் விஜயகாந்த் இன்று காலை சாமி தரிசனம் செய்தார். அவருடன் பிரேமலதா, சுதீஷ், மற்றும் கட்சி நிர்வாகிகளும் வந்தனர்.
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் யானைக்கு விஜயகாந்த், வாழைப்பழம் ஊட்டிய காட்சி.
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் யானைக்கு விஜயகாந்த், வாழைப்பழம் ஊட்டிய காட்சி.
Published on

கும்பகோணம்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய- மாநில அரசுகளை கண்டித்து திருவாரூரில் இன்று மாலை தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா மற்றும் மைத்துனரும், துணை பொதுச்செயலாளருமான சுதீஷ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை 7 மணியளவில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலுக்கு விஜயகாந்த் சாமி தரிசனம் செய்ய வந்தார். அவருடன் பிரேமலதா, சுதீஷ், மற்றும் கட்சி நிர்வாகிகளும் வந்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் விஜயகாந்துக்கு பரிவட்டம் கட்டி வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் கோவில் கொடி மரத்தை விஜயகாந்த் தரிசனம் செய்தார். பிறகு கோவில் யானை மங்களாவுக்கு வாழைப்பழங்களை ஊட்டினார்.

தொடர்ந்து கோவிலில் 100 பக்தர்களுக்கு விஜயகாந்த் பொங்கல் வழங்கினார்.

பிறகு அவர் நிருபர்களிடம் கூறும் போது, ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் இன்று மாலை திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய- மாநில அரசுகளை தாக்கி பேச போகிறேன்’ என்று தெரிவித்து காரில் புறப்பட்டு சென்றார்

கும்பகோணம் கோவிலில் விஜயகாந்த் சுமார் ஒருமணி நேரம் தரிசனம் செய்தார்.

முன்னதாக நேற்று இரவு சீர்காழி திருக்கோலக்காவில் உள்ள தாளபுரீஸ்வரர் கோவிலில் விஜயகாந்த் தரிசனம் செய்தார்.

இக்கோவிலில் ஓசைநாயகி அம்மனுக்கு தேன் வாங்கி கொடுத்து தரிசனம் செய்து அந்த தேனை சாப்பிட்டால் நன்றாக பேசும் சக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

கோவிலுக்கு வந்த விஜயகாந்த் மூலவர் திருத்தாள முடையாரை தரிசனம் செய்து பின்னர் ஓசைநாயகி அம்மனுக்கு தேன் வழங்கினார். தொடர்ந்து கோவில் சிவாச்சாரியார் வாக்குவாதினி மூலமந்திரம் பாராயணம் செய்து அர்ச்சனைகள் செய்து தீபாராதனை காட்டினார். பின்னர் அந்த தேனை சிவாச்சாரியார், விஜயகாந்த் அருந்த வாயில் கொடுத்தார்.

பிறகு அவர் கும்பகோணம் புறப்பட்டு இரவில் அங்குள்ள ஓட்டலில் தங்கினார். #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com