முலாயம் சிங்கை கைது செய்ய வேண்டும்: விஸ்வ இந்து பரிஷத் வலியுறுத்தல்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கரசேவகர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த அனுமதி கொடுத்த முன்னாள் முதல் மந்திரி முலாயம் சிங் யாதவை கைது செய்ய வேண்டும் என விஸ்வ இந்து பரிஷத் வலியுறுத்தியுள்ளது.
முலாயம் சிங்கை கைது செய்ய வேண்டும்: விஸ்வ இந்து பரிஷத் வலியுறுத்தல்
Published on

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த 1990-ம் ஆண்டில் அயோத்யாவில் கூடிய கரசேவகர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 28 பேர் பலியாகினர்.

இதற்கிடையே, உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் முன்னாள் முதல் மந்திரியாக இருந்த முலாயம் சிங் தனது 79-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அப்போது, அயோத்தியில் கூடிய கரசேவகர்களால் பெரும் பதட்டம் ஏற்பட்டது. தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கரசேவகர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டேன். மாநிலத்தின் நன்மையை கருதி நான் உத்தரவிட்டது சரிதான் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அயோத்யாவில் கூடிய கரசேவகர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த அனுமதி கொடுத்த முன்னாள் முதல் மந்திரி முலாயம் சிங் யாதவை கைது செய்ய வேண்டும் என விஸ்வ இந்து பரிஷத் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, விஸ்வ இந்து பரிஷத்தின் செய்தி தொடர்பாளர் சரத் ஷர்மா கூறுகையில், சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரான முலாயம் சிங் யாதவ் அயோத்யாவில் கூடிய கரசேவகர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த அனுமதி தந்ததை மீண்டும் ஒப்புக்கொண்டுள்ளார். எனவே, உத்தரப்பிரதேசம் மாநில அரசு முலாயம் சிங் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com