

கோவை:
கோவை மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் இன்று நடந்தது. இதில் கலந்து கொண்ட திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
மத தீவிரவாதம், சாதி வெறி வளர்ந்து வரும் சூழலில் நாத்திகம் தான் மனிதநேயத்தை உருவாக்கும். தமிழகத்தில் மட்டும் நாத்திகர் இயக்கம் பெரியாரால் மக்கள் இயக்கமாக உள்ளது. அனைத்து சாதியினரும் அர்ச்சராகும் சட்டத்தை நிறைவேற்ற கோரியும், மத்திய அரசு மண்டல் கமிஷன் பரிந்துரைத்த 27 சதவீத இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்றக் கோரியும் திராவிடர் கழகம் சார்பில் போராட்டம் நடத்த உள்ளோம். ஆன்மிக அரசியல் என்பது அதனை சொல்பவர்களுக்கும் புரியாது, கேட்பவருக்கும் புரியாது. ஆன்மிகம் என்பது சாமியார் வேலை. ஆனால் ஆட்சியை நடத்துவது அரசியல்வாதிகளின் வேலை. இரண்டிற்கும் தொடர்பு இல்லை. அரசியல் வாதிகள் நல்ல நடிகர்களாக இருந்திருக்கிறார்கள். நடிகர்கள் நல்ல அரசியல் வாதிகளாக இருப்பார்களா?
போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனையில் தமிழக அரசின் போக்கு கண்டனத்திற்குரியது. எனவே அரசு உடனடியாக தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். கவர்னர் உரை என்பது அமைச்சரவையில் தயாரிக்கப்பட்டது. தமிழகம் மருத்துவ துறையில் சிறப்பாக செயல்படுகிறது என கவர்னர் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது. இதனை தனது ஆய்வுகளில் கவர்னர் உறுதிபடுத்தினாரா?
இவ்வாறு அவர் கூறினார். #TamilNews