புயல் பாதிப்பு: தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்- வைகோ பேட்டி

தென் மாவட்டத்தில் புயல் காரணமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதில் தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து தேவையான உதவிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று வைகோ கூறினார்.
புயல் பாதிப்பு: தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்- வைகோ பேட்டி
Published on

திருப்பூர்:

ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ திருப்பூரில் இன்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது-

தமிழகத்தில் மணல் குவாரிகளை மூட உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதனை ம.தி.மு.க. வரவேற்கிறது. தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக மேல் முறையீடு செய்ய கூடாது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் மாற்று வழியில் மணல் கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும்.

தமிழகத்தில் வாழ்வாதாரத்தை கெடுக்கும் திட்டத்தை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மீத்தேன், நியூட்ரினோ திட்டத்தால் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடையும். ஆனால் தமிழகம் பாலை வனமாக மாறி விடும். தமிழக மக்களின் நலன் கருதி இத் திட்டத்தை மத்திய அரசு நிறுத்த வேண்டும். அ.தி.மு.க. அரசை பயமுறுத்தி இத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது.

ஜி.எஸ்.டி. வரி அவசர கோலத்தில் கொண்டு வரப்பட்டது. இதனால் தொழில்கள் முடங்கி தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். இதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தென் மாவட்டத்தில் புயல் காரணமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இதில் தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து தேவையான உதவிகளை செய்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com