தஞ்சையில் நடைபெறும் மாநாட்டில் புதிய கூட்டணி பற்றி முடிவு: வைகோ பேட்டி

தஞ்சையில் நடைபெறும் மாநாட்டில் எதிர்கால அரசியல் கூட்டணி குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று வைகோ கூறினார்.
தஞ்சையில் நடைபெறும் மாநாட்டில் புதிய கூட்டணி பற்றி முடிவு: வைகோ பேட்டி
Published on

திருச்சி:

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி ம.தி. மு.க. சார்பில் தஞ்சையில் வருகிற 16-ந்தேதி மாநாடு நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை பார்வையிடுவதற்காக சென்னையில் இருந்து கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ விமானம் மூலம் திருச்சி வந்தார்.

1995-ல் திருச்சியில் நடைபெற்ற முதல் ம.தி.மு.க. மாநில மாநாடு மிகப்பெரிய மாநாடாகவும், பிரமாண்டமாகவும் அமைந்தது. அதிகாலை 3.30 மணிக்கு பேசத் தொடங்கிய நான் எனது உரையை 5.30 மணிக்குத் தான் முடித்தேன்.

அந்த மாநாட்டையும் மிஞ்சும் அளவிற்கு தஞ்சை மாநாடு அமையும், இந்த மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் பல நிறைவேற்றப்படும். எதிர்கால அரசியல் கூட்டணி குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்படும்.

ஈழத்தமிழர்கள் 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய காரணமாக இருந்த வக்கீல் ராம்ஜெத்மலானியை நேற்று அவரது பிறந்த நாளையொட்டி சந்தித்து பேசினேன். அப்போது அவர் மதச்சார்பின்மையும், கூட்டாட்சி தத்துவமும் காக்கப் பட வேண்டுமானால் காங்கிரஸ், பாரதிய ஜனதா அல்லாத கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்றார். அதுதான் எனது ஆசையும் கூட. அதற்கு பக்க பலமாகவும் இருப்பேன்.

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நேற்று தீர்ப்பாயத்தில் ஆஜராகி வாதாடினேன். அப்போது தீர்ப்பாயம் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி தந்துள்ளது, நாங்கள் எரிவாயு எடுப்போம் என தைரியமாக கூறினார்.

தீர்ப்பாயத்தை தடை செய்ய மத்திய அரசு திட்டம் தீட்டுகிறது. இந்த வி‌ஷயத்தில் அனைத்து வழக்கறிஞர்களும், சமூக ஆர்வலர்களும் ஒன்றாக இணையவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com