சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற வேண்டுமானால் அதிமுக கூட்டணிக்கு திருமாவளவன் வரவேண்டும் - வைகைசெல்வன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அதிமுக கூட்டணிக்கு வந்தால் சிதம்பரம் தொகுதியில் ஜெயிப்பது உறுதி என்று வைகைசெல்வன் கூறியுள்ளார். #Vaigaichelvan #Thirumavalavan
சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற வேண்டுமானால் அதிமுக கூட்டணிக்கு திருமாவளவன் வரவேண்டும் - வைகைசெல்வன்
Published on

சென்னை:

சென்னையில் அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் வைகைசெல்வன் அளித்த பேட்டி வருமாறு:-

பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. கூட்டணிக்காக அ.தி.மு.க. கதவு திறந்திருக்கிறது. வருகிற 8-ந்தேதி அ.தி.மு.க. தலைமை கழகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி என்பது பற்றி விவாதித்து முடிவு எடுக்கப்படும்.

தி.மு.க. அணியில் இடம் பெறாத கட்சிகள் எங்களுடன் கூட்டணி பற்றி பேசி வருகின்றனர். பா.ஜனதா மற்றும் பா.ம.க. ஆகிய கட்சிகள் எங்களுடன் கூட்டணி வைக்க விரும்புகிறது. அது தொடர்பான ஆலோசனையும் நடந்து வருகிறது.

கூட்டணியில் சேர விரும்பும் கட்சிகள் அதிக தொகுதிகளை கேட்பதாக வெளியில் தகவல் பரப்பப்படுகிறது. அது உண்மையல்ல. ஒவ்வொரு கட்சிக்கும் அதன் சக்தி என்ன என்பது தெரியும். அதிக தொகுதிகளை கேட்டு வாங்கினால் அது தி.மு.க. கூட்டணிக்கு சாதகமாக அமைந்துவிடும்.

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் விரைவில் தி.மு.க. கூட்டணி உடையும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்தால் சிதம்பரம் தொகுதியில் ஜெயிப்பது உறுதி. அவர் ஒரு தொகுதி அல்லது 2 தொகுதி எதிர் பார்ப்பதாக தெரிகிறது.

கடந்த காலங்களில் அவர் அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்தபோதுதான் மகத்தான வெற்றியை பெற முடிந்தது. எனவே வெற்றி முக்கியமா? தொகுதி முக்கியமா? என்பதை திருமாவளவன் முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #Vaigaichelvan #Thirumavalavan

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com