

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
கொரோனாவுக்கு எதிரான போரில் களத்தில் நிற்கும் இந்திய மக்களுக்கும், பிரதமர் மோடிக்கும் அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும்.
கொரோனாவை எதிர்த்து போராடி வரும் இந்தியாவுக்கு தேவையான வென்டிலேட்டர்கள் நன்கொடையாக வழங்கப்படும் என்பதை நான் பெருமையுடன் தெரிவிக்கிறேன் என்று அவர் கூறி உள்ளார். மேலும் அவர் கூறும் போது, “பிரதமர் மோடி எனக்கு மிகவும் நல்ல நண்பர் என்பது உங்களுக்கு தெரியும். கண்ணுக்கு தெரியாத கொரோனா என்ற எதிரியை வீழ்ந்த இந்தியாவுக்கு அமெரிக்க உறுதுணையாக நிற்கும்.
இதில் இந்திய- அமெரிக்கர்கள் சிறந்த விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள். கொரேனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க ஒரு குழுவை அமெரிக்க நியமித்துள்ளது. இக்குழு நூற்றுக்கணக்கான மில்லியன் டோஸ் மருந்தை இந்த ஆண்டின் இறுதிக்குள் தயாரிக்க உள்ளது.
3 விதமான மருந்துகளை தயாரிக்க இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக 10 மில்லியன் டாலர் நிதியை அமெரிக்கா ஒதுக்கி உள்ளது.”