ஐ.எஸ் தலைவன் அல்-பக்தாதி மரணம் உறுதிப்படுத்த முடியவில்லை: அமெரிக்கா

ஐ.எஸ் தீவிரவாத இயக்க தலைவர் அல் பக்தாதி மரணமடைந்ததாக வந்த செய்தியின் உறுதித்தண்மை தெரியவில்லை என அமெரிக்க பாதுகாப்பு துறை செயலர் ஜிம் மேட்டீஸ் தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ் தலைவன் அல்-பக்தாதி மரணம் உறுதிப்படுத்த முடியவில்லை: அமெரிக்கா
Published on

ஐ.எஸ் தீவிரவாத இயக்க தலைவர் அல் பக்தாதி மரணமடைந்ததாக வந்த செய்தியின் உறுதித்தண்மை தெரியவில்லை என அமெரிக்க பாதுகாப்பு துறை செயலர் ஜிம் மேட்டீஸ் தெரிவித்துள்ளார்.

ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தினர், உலகமெங்கும் பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளனர். ஐ.எஸ் இயக்கத்தை ஒழிப்பதற்கான பணியில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினர் கடந்த 5 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தனர்.

ஈராக்கில் ஐ.எஸ் வசமிருந்த பெரும்பாலான நகரங்களை அரசுப்படையினர் மீட்டுவிட்டனர். அரசுப்படையினரின் வான் தாக்குதலில் ஐ.எஸ் இயக்க தலைவர் அபு பக்கர் அல்-பக்தாதி கொல்லப்பட்டதாக சிரிய போர் கண்காணிப்பகம் அறிவித்திருந்தது. கடந்த மாதம் ரஷ்ய ராணுவமும் இதே போல் பக்தாதி மரணமடைந்துவிட்டதாக அறிவித்திருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com