

புதுடெல்லி:
சமூக ஊடகங்களில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது பேஸ்புக். இதில் ஒருவர் கணக்கு தொடர்ந்து தங்கள் கருத்துகளை தெரிவிப்பர். அவர்களின் கருத்து பிடித்திருந்தால் மற்றவர்கள் லைக் மற்றும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். அந்த கருத்தை மற்றவர்களுக்கு ஷேர் செய்யலாம்.
இந்நிலையில், இந்தியாவில் உள்ள மந்திரிகள், அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கான பேஸ்புக் பக்கத்தில் மிகவும் பிரபலமானவர்களின் தரவரிசை வெளியிடப்பட்டது. இந்த தரவரிசையின் முதல்-மந்திரிகள் பிரிவில் மற்ற அனைத்து மாநில முதல் மந்திரிகளையும் பின்னுக்கு தள்ளி உத்தரப்பிரதேசம் மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யாநாத் முதலிடம் பிடித்துள்ளார்.
இந்த தரவரிசை கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை அவரவர் பேஸ்புக் பக்கங்களில் செய்யப்பட்டும் ஷேர் மற்றும் தெரிவிக்கப்படும் கருத்தை பொறுத்து வெளியிடப்பட்டுள்ளது. #yogiadityanath #tamilnews