கோப்புப் படம்
கோப்புப் படம்

21 சிறுவர்-சிறுமிகளுக்கு தேசிய வீர தீர விருதுகள்- குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பு

குடியரசு தினத்தையொட்டி இந்த ஆண்டு 21 சிறுவர்-சிறுமிகளுக்கு தேசிய வீர தீர விருதுகள் வழங்கப்பட உள்ளன. #BraveryAward #RepublicDay
Published on

புதுடெல்லி:

குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகளின் துணிச்சலான, சாகச செயலுக்காக ‘தேசிய வீர தீர விருதுகள்’ வழங்கப்படுகின்றன. பாரத் விருது, கீதா சோப்ரா விருது, சஞ்சய் சோப்ரா விருது, பாபு கைதானி விருது, பொது வீர தீர விருது என 5 பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. 

அவ்வகையில் கடந்த ஆண்டுக்கான தேசிய வீர தீர விருதுகளுக்கு 13 சிறுவர்கள், 8  சிறுமிகள் என மொத்தம் 21 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இறப்புக்குப் பின் வழங்கப்படும் கீதா சோப்ரா விருதானது, டெல்லியைச் சேர்ந்த நிஷிதா நேகி என்ற 15 வயது சிறுமிக்கு வழங்கப்பட உள்ளது. 

கோப்புப் படம்

விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட சிறுமிகளுக்கு பதக்கம், ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. அத்துடன், டெல்லியில் வரும் 26-ம் தேதி நடைபெறும், குடியரசு தின அணிவகுப்பிலும் கலந்துகொள்வார்கள். #BraveryAward #RepublicDay

X

Maalai Malar
www.maalaimalar.com