ஸ்பை வீடியோ: மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் டி.வி.எஸ். அகுலா

டி.வி.எஸ். நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் அகுலா மாடல் சமீபத்திய ஸ்பை வீடியோவில் மணிக்கு 140 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் செல்வது படமாக்கப்பட்டுள்ளது.
ஸ்பை வீடியோ: மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் டி.வி.எஸ். அகுலா
Published on

டி.வி.எஸ். அபாச்சி RR310S (அகுலா) அதிவேக மோட்டார்சைக்கிளாக இருக்கும் என பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், இந்த மாடல் மணிக்கு 160 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் செல்வது படமாக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் சோதனை செய்யப்பட்ட டி.வி.எஸ். அகுலா மாடலினை பஜாஜ் டாமினர் மூலம் விரட்டிய வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது. பஜாஜ் டாமினர் 400சிசி மாடல் மூலம் விரட்டப்பட்ட நிலையில், பஜாஜ் டாமினர் அதிகபட்சமாக மணிக்கு 159 கிலோமீட்டரில் சீறி பாயந்தது.

எனினும் டி.வி.எஸ். அகுலா வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாத டாமினர் சில நிமிட போராட்டத்திற்கு பின் அகுலாவினை பிடித்தது. புதிய அகுல RR310S மாடலில் பி.எம்.டபுள்யூ.லின் G310R  மாடலில் வழங்கப்பட்ட பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், விரைவில் இந்தியாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை புதிய டி.வி.எஸ். அகுலாவில் 310சிசி, 4-ஸ்டிரோக் லிக்விட் கூல்டு-சிங்கிள் சிலிண்டர் மோட்டார் கொண்டுள்ளது. பி.எம்.டபுள்யூ. G310R மாடலில் இந்த மோட்டார் 34 Bhp-28 Nm செயல்திறன் கொண்டுள்ளது. எனினும் இதே செயல்திறன் புதிய அகுலாவிலும் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

தற்சமயம் வீடியோவில் காணப்பட்ட அகுலா சென்ற வேகத்தை வைத்து பார்க்கும் போது இந்த மாடலில் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ABS வசதி வழங்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது.

பஜாஜ் டாமினர் 400 மற்றும் டி.வி.எஸ். அகுலா இடையே படமாக்கப்பட்ட ஸ்பை வீடியோவினை கீழே காணலாம்..,

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com