ஜெயலலிதா நினைவிடத்தில் தினகரன் அஞ்சலி: தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்தார்

மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து டி.டி.வி.தினகரன் அஞ்சலி செலுத்தினார்.
Published on

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இன்று மவுன ஊர்வலமும், அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தவும் டி.டி.வி.தினகரன் அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்பேரில் அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை முன்பு தினகரன் ஆதரவாளர்களும், தொண்டர்களும் திரண்டனர். மதியம் 12.45 மணி அளவில் தினகரன் அங்கு வந்தார்.


அதைத் தொடர்ந்து அவரது தலைமையில் பேரணி புறப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர்கள் பழனியப்பன், செந்தில் பாலாஜி, இன்பத்தமிழன், செந்தமிழன் மற்றும் வெற்றி வேல், கலைராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com