தினகரன் ஆதரவாளர் நாகராஜன் எம்.பி. கார் மீது அரசு பஸ் மோதி விபத்து

கோவையில் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் நாகராஜன் எம்.பி. கார் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் அவருடைய மகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தினகரன் ஆதரவாளர் நாகராஜன் எம்.பி. கார் மீது அரசு பஸ் மோதி விபத்து
Published on

கோவை:

கோவை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக இருப்பவர் நாகராஜன். இவர் டி.டி.வி. தினகரனின் ஆதரவாக உள்ளார். இவர் இன்று காலை டெல்லியில் இருந்து விமானத்தில் கோவைக்கு புறப்பட்டார்.

அவரை விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக டிரைவர் மணி காரில் விமான நிலையத்துக்கு புறப்பட்டார்.

அவருடன் நாகராஜன் எம்.பி.யின் மகன் விஜய் பிரனவ் (வயது 19) பீளமேட்டில் உள்ள கல்லூரிக்கு செல்வதற்காக காரில் ஏறி சென்றார்.

கார் காலை 9 மணியளவில் பீளமேடு பி.எஸ்.ஜி. கல்லூரி சிக்னல் அருகே சென்ற போது அந்த வழியாக சென்ற அரசு டவுன்பஸ் திடீரென கார் மீது மோதியது.

இந்த விபத்தில் எம்.பி.யின் மகன் விஜய் பிரனவ் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினார்.

இந்த தகவல் கிடைத்ததும் கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com