தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளராக சேது செல்வம் அறிவிப்பு!

இடைத்தேர்தல் அக்.6ம் தேதி நடைபெற உள்ளது.
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளராக சேது செல்வம் அறிவிப்பு!
Published on

புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் வேட்பாளராக சேது என்ற சேது செல்வம் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தட்டாஞ்சாவடி தொகுதிக்கு அக்.6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டின் மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் திமுக சார்பில் பரந்தாமன், சுகன்யா ஆகியோர் போட்டியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல்

தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாமில் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 5 சட்டமன்ற மற்றும் ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தாராபுரம், மதுராந்தகம், தட்டாஞ்சாவடி, நந்திகிராம், ரெஜிநகர் உள்ளிட்ட 5 சட்டமன்ற தொகுதிகளுக்கும், அசாமின் நாகோன் நாடாளுமன்ற தொகுதிக்கும் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த ஆறு தொகுதிகளுக்கும் வேட்புமனுத்தாக்கல் செப்.9 தொடங்கும் எனவும், வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் செப்.16 எனவும், வேட்புமனுக்களை பரிசீலனை செய்வதற்கான கடைசி நாள் செப்.17 என்றும், வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி செப்.19 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை அக்.9ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com