

சர்வதேசப் பந்தய வீரராகப் போட்டியிடும் நடிகர் அஜித் குமார், LMP3 Pro/Am பிரிவில் 'Ajith RedAnt by Virage' அணியின் சார்பில் 16-ஆம் எண் கொண்ட 'Ligier' பந்தயக் காரை இயக்குகிறார்.பந்தய மைதானத்தில் நடிகர் அஜித்தைக் கண்டவுடன் முதலமைச்சர் விஜய் அவரை நோக்கி விரைந்து சென்று நெகிழ்ச்சியுடன் ஆரத்தழுவித் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இங்கிலாந்தில் உள்ள சர்வதேச அளவில் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தய களத்தில் நடைபெற உள்ள 2026-ஆம் ஆண்டிற்கான 'மிச்செலின் லீ மான்ஸ் கப்' பந்தயத் தொடரின் 5-வது சுற்றை, தமிழக முதலமைச்சர் விஜய் [ஆசியப் பிரதிநிதியாகவும் சிறப்பழைப்பாளராகவும்] பங்கேற்றுப் பச்சைக்கொடி அசைத்து முறைப்படி தொடங்கி வைக்க உள்ளார்.
திரையுலகில் 34 ஆண்டுகளுக்கும் மேலாக இரு துருவங்களாகக் கருதப்பட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜய்யும் அஜித் குமாரும், சர்வதேச விளையாட்டுக் களம் ஒன்றில் இணைந்து நிற்பது உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பந்தய மைதானத்தில் நடிகர் அஜித்தைக் கண்டவுடன் முதலமைச்சர் விஜய் அவரை நோக்கி விரைந்து சென்று நெகிழ்ச்சியுடன் ஆரத்தழுவித் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். 34 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த இரு பெரும் நட்சத்திரங்களும் சர்வதேச விளையாட்டுக் களம் ஒன்றில் நேரில் சந்தித்துக்கொண்ட இந்த உணர்வுப்பூர்வமான காட்சி உலகெங்கிலும் உள்ள தமிழர்களையும் ரசிகர்களையும் பேரானந்தத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரே இடத்தில் அஜித்- விஜய் இருவரையும் சந்தித்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் திக்குமுக்காடி உள்ளனர்.
44 பந்தயக் கார்கள் பங்கேற்கும் இந்த பிரம்மாண்டமான 'மிச்செலின் லீ மான்ஸ் கப்' பந்தயத்தை முதலமைச்சர் விஜய் பச்சைக்கொடியை அசைத்து முறைப்படி தொடங்கி வைக்கிறார். சர்வதேசப் பந்தய வீரராகப் போட்டியிடும் நடிகர் அஜித் குமார், LMP3 Pro/Am பிரிவில் 'Ajith RedAnt by Virage' அணியின் சார்பில் 16-ஆம் எண் கொண்ட 'Ligier' பந்தயக் காரை இயக்குகிறார்.