இந்தியாவில் வறுமை கடுமையாகக் குறைந்துள்ளதாகவும், இருப்பினும் ஊதிய இடைவெளி 13 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது. இந்தக் அய்வுகள் தொடர்ச்சியான வருமான ஏற்றத்தாழ்வுகள், பலவீனமான வேலைத் தரம் மற்றும் அதிகரித்த கிராமப்புற வறுமை ஆகியவற்றை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
உலக வங்கி வெளியிட்டுள்ள அக்டோபர் 2026க்கான 'வறுமை மற்றும் சமத்துவ அறிக்கை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த இருவேறு எதார்த்தங்களை ஒரே நேரத்தில் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது. இந்தியாவில் தீவிர வறுமை விகிதம் மிகக் கடுமையாகக் குறைந்துள்ள போதிலும், அதிக ஊதியம் பெறுபவர்களுக்கும் குறைந்த ஊதியம் பெறுபவர்களுக்கும் இடையிலான ஊதிய இடைவெளி (Wage Gap) 13 மடங்கு அதிகரித்துள்ளது என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
உலக வங்கியின் ஆய்வறிக்கையின் படி இந்தியாவின் கடும் வறுமை விகிதம் 2011-ல் 27.1% ஆக இருந்ததிலிருந்து 2023-ல் 2.6% ஆகக் குறைந்துள்ளது . இதே காலகட்டத்தில், சுமார் 49.6 கோடி மக்கள் கீழ்-நடுத்தர வருமான வறுமைக் கோட்டிற்கு மேலே சென்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
வறுமையில் கணிசமான குறைப்பு ஏற்பட்டிருந்தபோதிலும், நாட்டில் அதிக ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கும் குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகமாகவே உள்ளது; அதாவது, மேல்மட்ட 10% தொழிலாளர்கள், கீழ்மட்ட 10% தொழிலாளர்களை விட சுமார் 13 மடங்கு அதிகமாக சம்பாதிப்பதாக உலக வங்கியின் அறிக்கை சுட்டிகாட்டியுள்ளது
உலக வங்கி தனது அக்டோபர் 2026 வறுமை மற்றும் சமத்துவ அறிக்கையில், ஒரு நாளைக்கு 4.20 டாலர் என்ற கீழ்-நடுத்தர வருமான வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் இந்திய மக்களின் பங்கு, 2011-ல் 57.7%-லிருந்து 2023-ல் 16.1%-ஆகக் குறைந்துள்ளது என்று கூறியுள்ளது. ஒரு நாளைக்கு 3 டாலர் என்ற கோட்டைப் பயன்படுத்தி அளவிடப்படும் கடும் வறுமை, 27.1%-லிருந்து குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மக்கள் தொகையில் வருமானம் எந்த அளவிற்குச் சமமாகவோ அல்லது சமமற்ற முறையிலோ பரவியுள்ளது என்பதை அளவிடும் இந்தியாவின் கினி குறியீடு, 2023-ஆம் ஆண்டில் 23.0 ஆக இருந்ததாக உலக வங்கியும் தெரிவித்துள்ளது.
இருப்பினும், ஊதிய ஏற்றத்தாழ்வுகள் குறிப்பிடத்தக்க அளவில் நீடித்து வருவதாக குறிப்பிட்டுள்ளது.ஏனெனில் 2023-ஆம் ஆண்டில், உயர் பதவியில் உள்ள 10 சதவீத தொழிலாளர்களின் சராசரி வருமானம், கீழ் பதவியில் உள்ள 10 சதவீத தொழிலாளர்களின் வருமானத்தை விட சுமார் 13 மடங்கு அதிகமாக இருந்தது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
கடும் வறுமை குறைந்ததன் விளைவாக, 2011-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023-ஆம் ஆண்டில், ஒரு நாளைக்கு 3 டாலர் என்ற வரம்பிற்குக் கீழ் வாழ்ந்த இந்திய மக்கள்தொகையின் பங்கு மிகவும் குறைவாக இருந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது
உலக வங்கி, கடும் வறுமையை அளவிட ஒரு நாளைக்கு 3 டாலர் என்ற அளவுகோலையும், கீழ்-நடுத்தர வருமான நாடுகளில் நிலவும் வறுமையை அளவிட ஒரு நாளைக்கு 4.20 டாலர் என்ற அளவுகோலையும் பயன்படுத்துகிறது. இந்த இரண்டு வரம்புகளும், வாழ்க்கைச் செலவில் உள்ள வேறுபாடுகளைச் சரிசெய்யும் சமநிலையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு 4.20 டாலர் வருமானத்திற்குக் கீழ் வாழும் மக்களின் பங்கு, 12 ஆண்டு காலப்பகுதியில் 57.7%-இலிருந்து 16.1%-ஆகக் குறைந்துள்ளது. இதனால், சுமார் 49.6 கோடி மக்கள் அந்த வறுமைக் கோட்டிற்கு மேலே உயர்ந்துள்ளனர் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
2023-ஆம் ஆண்டில், மேல்மட்ட 10% தொழிலாளர்களின் சராசரி வருமானம், கீழ்மட்ட 10% தொழிலாளர்களின் வருமானத்தை விட சுமார் 13 மடங்கு அதிகமாக இருந்தது என்று அந்த அறிக்கை தெரிவித்தது.
கீழ்மட்ட 10% தொழிலாளர்களின் சராசரி வருமானத்தில் ரூ. 1,000 ஈட்டினால், மேல்மட்ட 10% தொழிலாளர்களின் சராசரி வருமானத்தில் சுமார் ரூ. 13,000 ஈட்டுவார்கள் என்று உலக வங்கியின் சமீபத்திய அறிக்கை குறிப்பிட்டுள்ளது