விண்வெளியில் ஹலால் விருந்து: பாகிஸ்தான் வீரருக்காக 100+ உணவு வகைகள் தயார்

வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து புறப்பட்ட ஷென்ஷோ-24 விண்கலத்தில் நேற்று அலி விண்வெளி நிலையத்தை வந்தடைந்தார்.
Pakistani Astronaut
Published on: 
Summary

சக சீன வீரர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டபோது, கிழக்கின் கவிஞர் எனப் போற்றப்படும் அல்லாமா முகம்மது இக்பாலின் புகழ்பெற்ற கவிதையை அலி ஒப்பித்து, பின்னர் அதனைச் சீன மொழியில் மொழிபெயர்த்துக் கூறினார்.

சீனாவின் தியாங்காங் விண்வெளி நிலையத்தில் நுழைந்த முதல் வெளிநாட்டு விண்வெளி வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ள பாகிஸ்தான் விண்வெளிப் பயணி முகம்மது ஜீஷன் அலிக்காக, 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளைக் கொண்ட சிறப்பு ஹலால் உணவுப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

அலியின் உணவுத் தேவைகளைக் கருத்தில் கொண்டு இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதில் பீஃப் நிஹாரி, லாம்ப் கோர்மா, கொண்டைக்கடலைக் குழம்பு மற்றும் பட்டர் சிக்கன் உள்ளிட்ட பாகிஸ்தானிய விருப்ப உணவுகள் இடம்பெற்றுள்ளதாகவும் சீன அரசு ஊடகமான சிஜிடிஎன் தெரிவித்துள்ளது.

ஷென்ஷோ-24 விண்கலத்தில் வருகை

வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து புறப்பட்ட ஷென்ஷோ-24 விண்கலத்தில் நேற்று அலி விண்வெளி நிலையத்தை வந்தடைந்தார். சீனத் தளபதி டாங் ஹாங்போ மற்றும் விமானப் பொறியாளர் வு யி ஆகியோருடன் இணைந்து மூன்று பேர் கொண்ட குழுவில் இவர் இடம்பெற்றுள்ளார்.

கனவு நனவான தருணம்

சக சீன வீரர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டபோது, கிழக்கின் கவிஞர் எனப் போற்றப்படும் அல்லாமா முகம்மது இக்பாலின் புகழ்பெற்ற கவிதையை அலி ஒப்பித்து, பின்னர் அதனைச் சீன மொழியில் மொழிபெயர்த்துக் கூறினார். தியாங்காங் நிலையத்தில் கால் பதித்த முதல் வெளிநாட்டு வீரர் ஆனது மிகுந்த உற்சாகம் தருவதாகவும், தனது சிறுவயதுக் கனவு நனவாகிவிட்டதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மனிதர்களை ஏற்றிச் செல்லும் விண்வெளித் திட்டத்தில் சர்வதேசப் பங்கேற்பை விரிவுபடுத்தும் சீனாவின் முயற்சியில் இது முக்கியப் படியாகப் பார்க்கப்படுகிறது. அமைதி, நட்பு மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்காகவே சீன விண்வெளி நிலையம் உருவாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன், விண்வெளி ஆய்வின் பலன்கள் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் சென்றடைய பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

X