இந்திய அரசியலமைப்பு என்பது அநீதிக்கு எதிரான ஆயுதம் - ராகுல் காந்தி

இந்திய அரசியலமைப்பு என்பது வெறும் புத்தகம் மட்டுமல்ல, இந்த தேசத்தின் ஆன்மா.
ராகுல் காந்தி
Published on: 
Summary

அரசியலமைப்பு நாளில், நான் மீண்டும் ஒரு உறுதிமொழியை எடுக்கிறேன். எத்தகைய சூழலிலும் நாம் இதைப் பாதுகாப்போம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது ‘எக்ஸ்’ பதிவில் கூறியிருப்பதாவது:-

அநீதிக்கு எதிரான ஆயுதம்

இந்திய அரசியலமைப்பு என்பது வெறும் புத்தகம் மட்டுமல்ல, இந்த தேசத்தின் ஆன்மா.

இது ஒவ்வொரு குடிமகனின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் கேடயம், ஒவ்வொரு குரலுக்கும் வலிமை சேர்க்கும், நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் காவலன். இதுவே நமது ஜனநாயகத்தின் அடித்தளம். அநீதிக்கு எதிரான நமது மிகப்பெரிய ஆயுதம்.

போராடுவோம்

அரசியலமைப்பு நாளில், நான் மீண்டும் ஒரு உறுதிமொழியை எடுக்கிறேன். எத்தகைய சூழலிலும் நாம் இதைப் பாதுகாப்போம்.

ஒவ்வொரு இந்தியனின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து போராடுவோம். அரசியலமைப்பு வாழ்க, இந்தியா வாழ்க!

இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.

X