அரசியலமைப்புச் சட்டம் இந்திய ஜனநாயகத்தின் விலைமதிப்பற்ற சொத்து.. பிரதமர் மோடி அரசியலமைப்பு தின வாழ்த்து

1949 நவம்பர் 26ல் ஏற்கப்பட்ட இந்த அரசியலமைப்புச் சட்டம், 1950 ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது.
 பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on: 
Summary

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அரசியலமைப்பு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 அன்று அரசியலமைப்பு தினம் (சம்விதான் திவாஸ்) அனுசரிக்கப்படுகிறது.

1949ஆம் ஆண்டு இதே நாளில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் அரசியலமைப்பு நிர்ணய சபையால் ஏற்கப்பட்டதை நினைவுகூரும் விதமாக இது கொண்டாடப்படுகிறது.

1949 நவம்பர் 26ல் ஏற்கப்பட்ட இந்த அரசியலமைப்புச் சட்டம், 1950 ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது. அது குடியரசு தினமாக கொண்டாப்படுகிறது.

இந்நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அரசியலமைப்பு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எக்ஸ் பதிவு

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

"நாட்டு மக்கள் அனைவருக்கும் அரசியலமைப்பு தின நல்வாழ்த்துகள்.

இந்த புனிதமான தருணத்தில், மதிப்பிற்குரிய பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களுக்கும், அரசியலமைப்பு நிர்ணய சபையின் அனைத்து மாபெரும் ஆளுமைகளுக்கும் எனது வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசியலமைப்பு வடிவில் அவர்கள் வழங்கிய கொடை, இந்திய ஜனநாயகத்தின் விலைமதிப்பற்ற பாரம்பரிய சொத்து.

'வளர்ந்த இந்தியா' என்ற இலக்கை அடைவதற்கான பயணத்தில், இது தொடர்ந்து நமக்கு வழிகாட்டியாக இருக்கும்.

நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்களுக்கு மரியாதை செலுத்தும் அதே வேளையில், அதில் பொதிந்துள்ள விழுமியங்களை வலுப்படுத்துவதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் நாளாக இது அமைகிறது.

ஆழமாகச் சிந்திக்கப்பட்டு, தெளிவாக வரையறுக்கப்பட்ட சட்டங்கள், அறிஞர்களால் உருவாக்கப்பட்டவை; அவை ஒருபோதும் மறைந்து போகாது." என தெரிவித்துள்ளார்.

X