விஜயவாடா கனகதுர்கா கோயிலில் முதலமைச்சர் விஜய் சாமி தரிசனம்: செண்டை மேளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு!

தமிழகத்தில் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு விஜய் மேற்கொள்ளும் இந்த முக்கியப் பயணம் அரசியல் வட்டாரங்களில் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது.
Chief Minister Vijay
Published on: 
Summary

ஆன்மீகப் பயணத்தைத் தாண்டி, ஆந்திர அரசின் சார்பில் புன்னமி காட்டில் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் கலாச்சாரப் பெருவிழாவான 'விஜயவாடா உத்சவ் 2.0' நிகழ்ச்சியிலும் முதலமைச்சர் விஜய் முதன்மை விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.

ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையேயான தண்ணீர் தொடர்பான பிரச்சினைகள் மீண்டும் பேசுப்பொருளாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று விஜயவாடாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

முதல்வர் விஜய் ஆந்திர வருகை

கங்கா திட்டத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய கிருஷ்ணா நதி நீரின் பங்கு மற்றும் தண்ணீர் விநியோகத்தில் எதிர்கொள்ளப்படும் பிரச்சனைகள் குறித்து இரு முதலமைச்சர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில்,கோதாவரி-கிருஷ்ணா-காவேரி நதிகளை இணைக்கும் பிரச்சனையும் குறித்தும் பேச வாய்ப்பு இருப்பதாக வர வாய்ப்புள்ளது.

கனகதுர்கா கோயிலில் சாமி தரிசனம்

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ துர்கா மல்லேஸ்வர சுவாமி (கனகதுர்கா) கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் நவராத்திரி வழிபாடுகளை மேற்கொள்வதற்காக வருகை தந்துள்ளார். தசரா திருவிழாவின் உட்சகட்ட கொண்டாட்டங்கள் மற்றும் முதலமைச்சரின் வருகையையொட்டி இந்திரகீலாத்திரி பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. ஆந்திர அரசு சார்பில் அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் நேரில் வந்து முதலமைச்சர் விஜய்க்கு பாரம்பரிய முறைப்படி செண்டை மேளங்கள் முழங்க உற்சாக வரவேற்பளித்தனர்.

கனகதுர்கா கோயிலின் சிறப்புகள்

கிருஷ்ணா நதிக்கரையில் கம்பீரமாக அமைந்துள்ள இக்கோயிலில் வீற்றிருக்கும் தாய் கனகதுர்கா எட்டு கரங்களுடன் நான்கு அடி உயரத்தில் சுயம்புவாகத் தோன்றிய பெருமை கொண்டவர். வழக்கமான கோயில்களைப் போலன்றி, இங்கு பார்வதி தேவியான துர்கை, மல்லேஸ்வர சுவாமிக்கு வலதுபுறமாக அமைந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். புராண நம்பிக்கைகளின்படி, கிருஷ்ணா நதியானது அம்மனுக்கு மூக்குத்தியை பரிசாக வழங்கியதாகப் போற்றப்படுகிறது.

மேலும், ஆதிசங்கரரால் இங்கு ஸ்ரீசக்கரம் நிறுவப்பட்டு உக்கிரமான தெய்வம் சாந்தப்படுத்தப்பட்ட வரலாறும் கொண்டது இத்தலம். தீய சக்திகளை நீக்கி பக்தர்களின் பயத்தைப் போக்கி வெற்றியைத் தரும் இறைவியாக விளங்குவதால், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசியல் தலைவர்களும் ஆன்மீகப் பெரியோர்களும் தங்களின் வெற்றிகளுக்காக இங்கு வந்து வழிபாடு செய்வது நீண்டகாலமாக மரபு வழியாகத் தொடர்கிறது.

விஜயவாடா உத்சவ் 2.0' கலாச்சாரப் பெருவிழா

ஆன்மீகப் பயணத்தைத் தாண்டி, ஆந்திர அரசின் சார்பில் புன்னமி காட்டில் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் கலாச்சாரப் பெருவிழாவான 'விஜயவாடா உத்சவ் 2.0' நிகழ்ச்சியிலும் முதலமைச்சர் விஜய் முதன்மை விருந்தினராகக் கலந்துகொள்கிறார். இந்நிகழ்ச்சியில் ஆந்திராவின் பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகள், கண்கவர் லேசர் காட்சிகள் மற்றும் மாநிலத்தின் கலாச்சார பெருமையை பறைசாற்றும் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. இந்தத் திருப்பயணம் இரு மாநிலங்களுக்கு இடையிலான நல்லுறவையும் கலாச்சாரப் பரிமாற்றத்தையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

தமிழகத்தில் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு விஜய் மேற்கொள்ளும் இந்த முக்கியப் பயணம் அரசியல் வட்டாரங்களில் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது. தசரா நவராத்திரி திருவிழாவின்போது தேசிய மற்றும் மாநிலத் தலைவர்கள் பலரும் விஜயவாடா கனகதுர்கா அம்மனைத் தரிசித்து வரும் சூழலில், தமிழக முதலமைச்சரின் இந்தப் பயணம் தமிழக மற்றும் ஆந்திர அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com