இன்று பிறந்த நாள்: விஜயகாந்துக்கு தமிழிசை-வைகோ வாழ்த்து

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு தமிழிசை சவுந்தரராஜன்,வைகோ ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இன்று பிறந்த நாள்: விஜயகாந்துக்கு தமிழிசை-வைகோ வாழ்த்து
Published on

சென்னை:

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

இதையொட்டி தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

வீட்டுக்கு வந்த தமிழிசையை விஜயகாந்தும் அவரது மனைவி பிரேமலதாவும் வரவேற்றனர். சிறிது நேரம் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

பா.ஜனதா துணை தலைவர் பி.டி. அரசகுமார், வக்கீல் பிரிவு செயலாளர் தங்கமணி, காளிதாஸ், முருகன், கணேசன் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும் விஜயகாந்த் வீட்டுக்கு சென்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com