தமிழகத்தில் 11 மணி வரை 30.62 சதவீத வாக்குகள் பதிவு- ஆரணியில் அதிகபட்சமாக 36.51 சதவீதம்

தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 30.62 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். #TNElections2019 #VoterTurnout
தமிழகத்தில் 11 மணி வரை 30.62 சதவீத வாக்குகள் பதிவு- ஆரணியில் அதிகபட்சமாக 36.51 சதவீதம்
Published on

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 19 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது காரணமாக தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 9 மணி நிலவரப்படி 13.48 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 30.62  சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.  

“11 மணி நிலவரப்படி அதிகபட்சமாக ஆரணியில் 36.51 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. மத்திய சென்னையில் 22.89 சதவீதம், தென் சென்னையில் 23.87 சதவீதம், வட சென்னையில் 23.36 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com