ரூ.1 கோடி மானியத்தில் தமிழ்ப்பண்பாட்டு மையம்

ஒரு கோடி ரூபாய் ஆண்டு மானியத்தில் தமிழ்ப் பண்பாட்டு மையம் ஒன்று உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. #TNBudget2018 #OPS
ரூ.1 கோடி மானியத்தில் தமிழ்ப்பண்பாட்டு மையம்
Published on

சென்னை:

தமிழக சட்டசபையில் இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:-

 ஒரு கோடி ரூபாய் ஆண்டு மானியத்தில் தமிழ்ப் பண்பாட்டு மையம் ஒன்று உருவாக்கப்படும்.

சர்வதேச அளவில் தமிழ் மொழி மற்றும் பண்பாட்டைப் பாதுகாத்து பரப்புவதற்காக தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி விரிவாக்க மையம் ஒன்று உருவாக்கப்படும். இதற்கென ஆண்டு மானியமாக 2 கோடி ரூபாயை அரசு வழங்கும்.

அதேபோன்று ஒரு கோடி ரூபாய் ஆண்டு மானியத்தில் தமிழ்ப் பண்பாட்டு மையம் ஒன்று உருவாக்கப்படும். நலிந்த கலைஞர்களுக்கான மாதாந்திர நிதியுதவி 1,500 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

நமது மாநிலம் 1969-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் நாளன்று தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு 50-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, இந்த ஆண்டினை தமிழ்நாடு பொன்விழா ஆண்டாக அரசு கொண்டாடி வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TNBudget #TNBudget2018 #TNbudgetsession #OPS #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com