தமிழகத்தின் கடன் ரூ.3.55 லட்சம் கோடி - பட்ஜெட்டில் அறிவிப்பு

தமிழக அரசுக்கு ரூ.3,55,845 கோடி கடன் இருப்பதாக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TNBudget #TNBudget2018 #OPS
தமிழகத்தின் கடன் ரூ.3.55 லட்சம் கோடி - பட்ஜெட்டில் அறிவிப்பு
Published on

தமிழக சட்டசபையில் இன்று 2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

• தமிழகத்தின் கடன் ரூ.3,55,845 கோடியாக உள்ளது.

• ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற ரூ.20 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு

• வருவாய் துறைக்கு ரூ.6,144 கோடி தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

• ஒட்டன்சத்திரம், தாராபுரம், அவினாசி இடையே சாலையை 4 வழி சாலையாக்க திட்டம்

• தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.482.84 கோடி ஒதுக்கீடு

• சென்னை- குமரி தொழில் வழித்தட திட்டம் செயல்படுத்தப்படும்

• செங்கோட்டை- கொல்லம் இடையில் 45 கி.மீ. சாலையை அகலப்படுத்தும் பணி துவக்கம்

• 2018 ஜூலை முதல் 2018 பிப்ரவரி வரை ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.632 கோடி பெறப்பட்டுள்ளது

• கோவையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த சாத்தியக்கூறுகள் தயாரிக்கும் பணிகள் துவக்கம்

• குடிமராமத்து பணிகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு

• கோவை, நெல்லை, குமரி, மதுரையில் மருத்துவ கல்லூரிகளில் 345 புதிய இடங்கள் உருவாக்கப்படும்

• பள்ளி கல்வித்துறைக்காக ரூ.27,205.88 கோடி ஒதுக்கீடு

• மகளிர் சுகாதார திட்டத்தில் சானிட்டரி நாப்கின்கள் வழங்க ரூ.60.58 கோடி ஒதுக்கீடு

• உழவர் பாதுகாப்பு திட்டத்திற்கு ரூ.269.82 கோடி நிதி ஒதுக்கீடு

• பசுமை வீடுகள் திட்டத்தில் ரூ.420 கோடியில் 20 ஆயிரம் வீடுகள் கட்டப்படும்

• 100 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகிறது

• நலிந்த கலைஞர்களுக்கான மாதாந்திர நிதியுதவி ரூ.1500ல் இருந்து ரூ.2000-ஆக உயர்வு

இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TNBudget #TNBudget2018 #TNbudgetsession #OPS #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com