புதுக்கோட்டை மீனவர்கள் மேலும் 3 பேர் கைது: இலங்கை கடற்படை நடவடிக்கை

புதுக்கோட்டையை சேர்ந்த மேலும் 3 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மீனவர்கள் மேலும் 3 பேர் கைது: இலங்கை கடற்படை நடவடிக்கை
Published on: 

அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 158 விசைப்படகுகளில் 800 மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் அப்பகுதியை சேர்ந்த சகோதரர்களான பிரசாத், பிரதீப் மற்றும் செல் வராஜ் ஆகியோர் நேற்றிரவு நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை யினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 3 பேரையும் கைது செய்த தோடு, விசை படகையும் பறி முதல் செய்தனர். பின்னர் அவர்களை விசாரணைக் காக இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.

மீனவர்கள் சிறை பிடிக் கப்பட்ட தகவலை அறிந்த அவர்களது குடும்பத்தினர் கதறி அழுதனர். கடந்த 5-ந் தேதி கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் மீன வர்கள் 8 பேர் சிறை பிடிக் கப்பட்ட நிலையில் தற் போது மேலும் 3 பேர் சிறை பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது.

மீன்பிடி தடை காலத் திற்கு பிறகு கடலுக்கு மீன் பிடிக்கச்சென்ற புதுக் கோட்டை மாவட்ட மீனவர் களில் இதுவரை 15-க்கும் மேற்பட்டோரை இலங்கை கடற்படையினர் கைது செய் துள்ளனர். 3 விசைப் படகு களையும் பறிமுதல் செய்துள் ளனர்.

இலங்கை கடற்படையி னரின் தொடர் நடவடிக்கை யால் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கவலை யடைந்துள்ளனர். தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட் டுள்ளதாகவும் தெரிவித் துள்ளனர். எனவே இந்த வி‌ஷயத்தில் மத்திய-மாநில அரசுகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com