திருப்பத்தூர் கதிரிமங்கலம் ஊராட்சி சார்பில் 600 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள்

திருப்பத்தூர் கதிரிமங்கலம் ஊராட்சியில் தி.மு.க. சார்பில் அப்பகுதிக்கு உட்பட்ட 600 ஏழை குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் அரிசி வழங்கும் நிகழ்ச்சி ஆலமரத்து வட்டம் பகுதியில் நடந்தது.
அரிசி
அரிசி
Published on

திருப்பத்தூர்:

திருப்பத்தூரை அடுத்த கதிரிமங்கலம் ஊராட்சியில் தி.மு.க. சார்பில் அப்பகுதிக்கு உட்பட்ட 600 ஏழை குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் அரிசி வழங்கும் நிகழ்ச்சி ஆலமரத்து வட்டம் பகுதியில் நடந்தது.

தி.மு.க. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வி.வடிவேல் தலைமை வகித்தார். 600 ஏழை குடும்பங்களுக்கு அரிசி மளிகை பொருட்களை திருவண்ணாமலை தொகுதி சி.என்.அண்ணாதுரை எம்.பி., நல்லதம்பி எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் தேவராஜ் வழங்கினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் அண்ணா அருணகிரி, மாவட்ட துணை செயலாளர் கே.பி.ஆர். ஜோதிராஜ், ஒன்றிய செயலாளர் அன்பழகன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதா தண்டபாணி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com