தமிழகத்தில் ஓமியோபதி மருத்துவக்கல்லூரிகளை அதிகப்படுத்த வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்

தமிழகத்தில் ஓமியோபதி மருத்துவக்கல்லூரிகளை அதிகப்படுத்த வேண்டும் என மக்களவையில் தொல்.திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தினார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்
Published on

புதுடெல்லி:

மக்களவையில் ஓமியோபதி மத்திய சபை மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. இதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு அந்த மசோதாவை ஆதரித்து பேசினார். ஓமியோபதி மத்திய சபை மசோதாவிற்கு தனது ஆதரவை தெரிவித்துக்கொள்வதாகவும், மத்திய அரசின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது என்றும் அவர் கூறினார். 

மேலும் அவர் பேசும்போது, ‘தமிழகத்தில் ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகள் மிகக்குறைவாகவே உள்ளன. ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளை அதிகப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாற்று மருத்துவத்திற்கு போதுமான நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும். பொதுவாக மாற்று மருத்துவத்தை மேம்படுத்த அரசு முயற்சி எடுப்பதில்லை. அதனால் மக்கள் அலோபதி மருத்துவத்தையே நம்பி உள்ளனர்.

ஓமியோபதி மருத்துவம் போன்ற மாற்று மருத்துவ முறைகளை மேம்படுத்த அரசு முன்வர வேண்டும். ஓமியோபதி மருத்துவம் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்’ என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com