

ஆனால், டோனியிடம் இருந்து எவ்வித பதிலும் இன்னும் வெளியாகவில்லை. கிரிக்கெட்டின் முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என அனைவரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான முனாப் பட்டேல் டோனிக்கு ஆதரவாக சில கருத்துக்களை கூறியுள்ளார். அவர் கூறியதாவது:
1975ம் ஆண்டு முதல் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் செய்த சாதனைகளை டோனி, 2007-2015ம் ஆண்டுகளிலேயே செய்து முடித்துவிட்டார். இந்தியாவிற்கென அனைத்து கோப்பைகளையும் வென்று கொடுத்துவிட்டார்.
எனவே, டோனி மாதிரியான ஒரு சிறந்த வீரரை இந்திய அணியில் இருந்து அவ்வளவு எளிதாக தவிர்க்க முடியாது.