ஆடியோ வெளியானதில் எங்களுக்கு தொடர்பில்லை- தங்க தமிழ்ச்செல்வன்

அமைச்சர் ஜெயக்குமார் தொடர்பான ஆடியோ வெளியானதற்கும், தங்களுக்கும் எந்த தொடர்புமில்லை என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறினார். #TTVDhinakaran #Jayakumar #ThangaTamilSelvan #JayakumarAudio
பழைய குற்றாலத்தில் தங்கதமிழ்செல்வன் நடைபயிற்சியில் ஈடுபட்ட காட்சி.
பழைய குற்றாலத்தில் தங்கதமிழ்செல்வன் நடைபயிற்சியில் ஈடுபட்ட காட்சி.
Published on

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் பழைய குற்றாலத்தில் தனியார் விடுதியில் தங்கியுள்ள தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 2 நாட்களுக்கு முன்பு டி.டி.வி. தினகரன் தலைமையில் சென்னையில் ஆலோசனை நடத்தினோம். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் எந்தவித நலத்திட்ட பணிகளும் நடைபெறவில்லை. இதனை கண்டித்து அந்தந்த தொகுதிகளில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது குறித்து டி.டி.வி.தினகரன் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் ஓரிரு நாட்களில் தீர்ப்பு வருவதாக தெரிகிறது. தீர்ப்பு எங்களுக்கு சாதகமாகவே வரும் என எதிர் பார்க்கிறோம். அதன்பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

தாமிரபரணி புஷ்கர விழாவில் கலந்து கொண்டு நீராடுவதன் மூலம் இறைவன் அருள்புரிந்து எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என கருதுகிறோம். ஆகவே நாங்கள் அனைவரும் பாபநாசத்திற்கு சென்று நீராடுகிறோம்.

புஷ்கர விழாவில் பங்கேற்று நீராடுவதற்காகவே குற்றாலம் வந்துள்ளோம். பாபநாசத்தில் நீராடிவிட்டு இன்றும், நாளையும் குற்றாலத்தில் தங்கி ஓய்வெடுத்து விட்டு நாளை மறுநாள் ஊருக்கு திரும்பி செல்கிறோம்.

தனக்கு அவதூறு ஏற்படும் வகையில் அந்த ஆடியோவை மாபியா கும்பல் வெளியிட்டுள்ளது என ஜெயக்குமார் கூறியிருக்கிறார். ஆனால் அந்த ஆடியோவை அவருடைய மாமியார் கும்பல் தான் வெளியிட்டுள்ளது.

அமைச்சர் ஜெயக்குமார் மீதான புகாரின் மீது முதல்-அமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனமாக இருக்கிறார். ஆகவே அதுகுறித்து விசாரணை நடத்தி தகுந்த எடுக்கவேண்டும். நடவடிக்கை எடுத்தால் அனைத்து உண்மைகளும் வெளிவரும்.

இவ்வாறு தங்க தமிழ்ச்செல்வன் கூறினார். #TTVDhinakaran #Jayakumar #ThangaTamilSelvan #JayakumarAudio

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com