ரஜினியின் அரசியல் முடிவு குழப்பத்தை ஏற்படுத்தும்- தங்க தமிழ்ச்செல்வன்

ரஜினியின் அரசியல் முடிவு குழப்பத்தையே ஏற்படுத்தும் என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
தங்க தமிழ்ச்செல்வன்
தங்க தமிழ்ச்செல்வன்
Published on

ஆண்டிப்பட்டி:

தேனி மாவட்டம் மயிலாடும்பாறையில் தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வருமானவரித்துறை சோதனைக்கு பயந்தே தி.மு.க. கொண்டு வரும் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்ற தமிழக அரசு மறுத்து வருகிறது. மத்திய அரசு மீது வைத்துள்ள பயத்தையே இது காட்டுகிறது. இதேபோல்தான் நடிகர் விஜய் வீட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். இதுபோன்ற செயல்கள் மத்திய அரசின் அதிகாரத்தின் வெளிப்பாடாக உள்ளது. தற்போது உள்ள சூழலில் மத்திய அரசை எதிர்க்கும் துணிச்சல் தமிழகத்தில் தி.மு.க.வுக்கு மட்டுமே உள்ளது.

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க போவதை வரவேற்கிறோம். அதே வேளையில் கட்சிக்கும், ஆட்சிக்கும் வெவ்வேறு தலைமை என்பதை ஏற்றக்கொள்ள முடியாது. அவ்வாறு இருந்தால் கட்சியே ஒரு நிலைப்பாட்டுக்கு வராது. இது குழப்பமான முடிவாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com