ஜம்மு-காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்: ஒரு வீரர் காயம்

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் ஒரு வீரர் காயமடைந்தார்.
ஜம்மு-காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்: ஒரு வீரர் காயம்
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கலாரூஸ் பகுதியில் ராணுவ முகாம் உள்ளது. நேற்று இரவு இந்த முகாமை திடீரென சுற்றி வளைத்த தீவிரவாதிகள், சரமாரியாக துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.

உடனடியாக வீரர்களும் உஷார்படுத்தப்பட்டு, பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து தீவிரவாதிகள் அந்த இடத்தில் இருந்து பின்வாங்கியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு வீரர் காயம் அடைந்தார்.

அதேசமயம் தப்பி ஓடிய தீவிரவாதிகள் அப்பகுதியில் பதுங்கியிருக்கலாம் என தெரிகிறது. எனவே, அவர்களை தேடும் பணியில் ராணுவமும் காவல்துறையும் முடுக்கி விடப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com