பழனியில் அலைமோதிய ஐயப்ப பக்தர்கள்

பழனி நகரம் ஆண்டு முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும்.
பழனியில் அலைமோதிய ஐயப்ப பக்தர்கள்
Published on: 
Summary

விடுமுறை தினம் என்பதால் கேரளாவில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், பழனி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

தமிழ் கடவுள் முருகபெருமானின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். தைப்பூசம், பங்குனிஉத்திரம், சூரசம்ஹாரம், வைகாசி விசாகம் உள்ளிட்ட திருவிழாக்களின்போது லட்சக்கணக்கான பக்தர்களும் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் வருகை தருவார்கள்.

பழனி

இதனால் பழனி நகரம் ஆண்டு முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். இன்று விடுமுறை தினம் என்பதால் கேரளாவில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், பழனி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

தற்போது சபரிமலை சீசின் தொடங்கி உள்ள நிலையில் மாலை அணிந்து விரதம் இருந்த பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் பழனி, ராமேஸ்வரம் உள்ளிட்ட புனித ஸ்தலங்களுக்கு ஆன்மீக பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் பழனியில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அடிவாரம், கிரிவீதி, ரோப்கார் நிலையம், மின் இழுவை நிலையம், யானைப்பாதை, படிப்பாதை உள்ளிட்ட இடங்களில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். மலைக்கோவிலுக்கு சென்ற அவர்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் கூட்டம்

பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் பஸ் நிலையத்தில் ஏராளமானோர் திரண்டனர். போதிய அளவில் பஸ்கள் இயக்கப்பட்டபோதும் பயணிகள் அதில் இடம் பிடிக்க முண்டி அடித்து சென்றனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டது.

X