நர்சு கொலையில் ஆஸ்பத்திரி ஊழியர் கைது- பரபரப்பு வாக்குமூலம்

சந்தேகத்தின் அடிப்படையில் சரவணனிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர்.
நர்சு கொலையில் ஆஸ்பத்திரி ஊழியர் கைது- பரபரப்பு வாக்குமூலம்
Published on: 
Summary

சரவணன் மீது ஏற்கனவே பல்லடம் போலீஸ் நிலையத்தில் மொபைல் போன் திருடிய வழக்கு உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பூங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (27) கட்டுமான தொழிலாளி. இவரது அத்தை மகள் உத்திரா (26) நர்சிங் படித்துள்ளார். இருவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது .

திருப்பூர் மாவட்டம் பல்ல கவுண்டன்பாளையத்தில் உத்திரா கணவர் ரஞ்சித்குமார் உடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

நர்சு

ரஞ்சித்குமார் கட்டிட வேலைக்கு சென்று வந்து உள்ளார். உத்திரா அதே பகுதியில் தனியார் மருத்துவ மனையில் கடந்த 3-ந் தேதி முதல் நர்சாக வேலைக்கு சேர்ந்தார். காலையில் ரஞ்சித்–குமார் வேலைக்கு செல்லும்–போது மனைவியை மருத்துவமனையில் இறக்கி விட்டு செல்வார். இரவு வேலை முடிந்து திரும்ப வரும்போது அவரை மருத்துவமனைக்கு சென்று அழைத்து வீட்டுக்கு வருவார்.

மாயம்

இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி மனைவியை வழக்கம் போல் ரஞ்சித்குமார் காலை அழைத்து மருத்துவமனைக்கு சென்று விட்டுள்ளார். இரவு மனைவியை அழைத்து வர மருத்துவமனைக்கு சென்று உள்ளார். ஆனால் மனைவி சீக்கிரமாகவே சென்று விட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்து உள்ளனர்.

இதை அடுத்து ரஞ்சித்குமார் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் மனைவி உத்திரா இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்தவர் பல்வேறு இடங்களில் மனைவியை தேடியுள்ளார். ஆனால் மனைவி குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை இதை அடுத்து கடந்த 15 ஆம் தேதி ஊத்துக்குளி போலீசில் ரஞ்சித் குமார் புகார் அளித்தார்.

உடல் கண்டெடுப்பு

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி பகுதியில் பொன் கைலாஷ் நகர் செல்லும் வழியில் ஒரு காட்டில் கடந்த 17ஆம் தேதி இளம்பெண் உடல் நிர்வாண நிலையில் கிடப்பதாக பெருந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் இறந்த கிடந்தது மாயமான செவிலியர் உத்திரா என்பது தெரிய வந்தது.

போலீசார் விசாரணை

அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகை மாயமாகி இருந்ததுமேலும் நிர்வாண நிலையில் உடல் அழுகி போய் இருந்ததால் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரபடுத்தினர் கொலையாளிகளை பிடிக்க 5 தனி படைகள் அமைக்கப்பட்டன.

இதற்கிடையே பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் இருக்கும் மனைவியின் உடலை பார்க்க கணவர் ரஞ்சித்குமார் சென்றார் அங்கு மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதார் துக்கம் தாங்காமல் மருத்துவமனை அருகே இருக்கும் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதை பார்த்து அதிர்ச்சடைந்த அவரது உறவினர்கள் ரஞ்சித்குமாரை மீட்டு அதே பெருந்துறை மற்றுக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

கொலை

இந்நிலையில் கொலைக்கு காரணமானவர்களை துப்பாக்கியால் சுட்டு தள்ள வேண்டும் என உத்திரா உறவினர்கள் ஆவேசத்துடன் கூறினர் அவரது உடலை வாங்க மறுத்து இரண்டு நாட்களாக போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் பரபரப்–பான சூழ்நிலை நிலவியது.

இந்நிலையில் போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்ட–னர். அப்போது சம்பவத்தன்று மருத்துவ மனையில் பணிபுரியும் சக ஊழியரான திருப்பூர் மாவட்டம் ஆண்டிபாளையம் வட வீதியைச் சேர்ந்த சரவணன் (23) என்பவருடன் உத்திரா மோட்–டார் சைக்கிளில் சென்றது சி.சி.டி.வி கேமரா மூலம் உறுதியானது.

இதனால் சந்தேகத்தின் அடிப்படையில் சரவணனிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். அப்போது 4 பவுன் நகைக்காக உத்திராவை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதை அடுத்து சரவணன்  போலீசார் நேற்று கைது செய்தனர்.

நகை

இது குறித்து போலீசார் கூறும்போது, கொலையாளி சரவணன், உத்திரா வேலை செய்யும் மருத்துவமனையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தான் அட்டெண்டராக வேலைக்கு சேர்ந்துள்ளார். ஒரே மருத்துவமனையில் வேலை பார்த்ததால் இருவரும் அறிமுகம் ஆகியுள்ளார். சரவணனுக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டு உள்ளது. அப்போது தான் உத்திரா கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகை அவர் ஞாபகத்துக்கு வந்தது. உத்திராவிடமிருந்து 4 பவுன் நகையை பறிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சம்பவத்தன்று அவரை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார் .

அப்போது ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே பொன் கைலாஷ் நகர் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்கு நைசாக பேசி அவரை சரவணன் அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்றதும் உத்திரா கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்து உள்ளார்.

எதிர்ப்பு

அப்போது உத்திரா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இவரை விட்டால் கண்டிப்பாக காட்டிக் கொடுத்து விடுவார் என்று எண்ணிய சரவணன் உத்திராவை கழுத்தை நெறித்து கொன்று உள்ளார்.

பின்னர் கொலையை மறைப்பதற்காகவும் போலீசாரின் கவனத்தை திசை திருப்பும் வகையில் உத்திரா அணிந்திருந்த ஆடைகளை கலைத்து அவரை நிர்வாணமாக்கி உடலை அங்கேயே விட்டு சென்று நகையை எடுத்துச் சென்று உள்ளார். சரவணன் மீது ஏற்கனவே பல்லடம் போலீஸ் நிலையத்தில் மொபைல் போன் திருடிய வழக்கு உள்ளது.

இவ்வாறு போலீசார் கூறினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com