

விஜய்யின் தவெக வாக்கு எண்ணிக்கையில் 111 இடங்கள் என்ற அளவில் முன்னிலை வகிக்கும் நிலையில் ஆட்சி அமைக்கும் தருவாயில் உள்ளது. பழம்பெரும் கட்சிகளான திமுக, அதிமுகவை 2 ஆண்டுகள் பழைய தவெக வீழ்த்தியுள்ளது வரலாற்று நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பா.சிதம்பரன் மகன் கார்த்தி சிதம்பரம் வெளியுட்டுள்ள எக்ஸ் பதிவில், தமிழ்நாட்டில் அமைதியான முறையில் Reformasi, Aragalaya, Arab Spring, July Uprising, and Jana Andolan III போன்ற புரட்சி நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
Reformasi - இந்தோனேசியாவில் 1998 இல் 30 ஆண்டுகளாக அதிபர் ஆட்சிக்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டத்தின் பெயர். இதன்பின் அங்கு ஜனநாயகம் துளிர்த்தது
Aragalaya - இலங்கையில் 2022 இல் பொருளாதார வீழ்ச்சியால் அதிருப்தியடைந்த மக்கள் முன்னெடுத்த போராட்டம். அதிபர் கோத்தபாய ராஜபக்சேவை நாட்டை விட்டு ஓட வைத்த மக்கள் புரட்சி இது.
Arab Spring - அரபு நாடுகளில் பரவிய சர்வாதிகாகராக ஆட்சியை அகற்றும் மக்கள் புரட்சி அரபு வசந்தம் அழைக்கப்படுகிறது.
July Uprising - ஷேக் ஹசீனாவின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக 2024 இல் மக்கள் நடத்திய போராட்டம் ஆகும்.
Jana Andolan III - நேபாளத்தில் சர்மா ஒலி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக வெடித்த ஜென் z இளைஞர்களின் புரட்சி ஆம்.
இவை அனைத்தும் வன்முறையோடு கலந்தே நடைபெற்றது. ஆனால் தமிழநாட்டில் வன்முறை இன்றி மிகவும் அமைதியாக இதுபோன்றதொரு புரட்சி நடைபெற்றுள்ளதாக கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.