தமிழக மீனவர்களின் நலனை இலங்கையிடம் அடகு வைப்பதா?- மாணிக்கம் தாகூர் கண்டனம்

தமிழ்நாட்டு மீனவர்களின் எதிர்காலத்தை இலங்கை வசம் அடகு வைத்துவிட்டு டெல்லி அரசு மவுனம் சாதிப்பதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது; இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்
Published on: 
Summary

சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது படகையும் உடனடியாக விடுவிக்க மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் துரிதமாகச் செயல்பட வேண்டும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

இலங்கை சிறையில் வாடும் நமது 9 ராமேஸ்வர மீனவர்களின் காவலை, ஊர்காவல்துறை நீதிமன்றம் 2-வது முறையாக வரும் 30-ந்தேதி வரை நீட்டித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. ஆயுத பூஜை நாளில் தங்களது வாழ்வாதாரப் படகுகளை வணங்கி வழிபட முடியாமல் மீனவக் குடும்பங்கள் கண்ணீரில் தவிக்கின்றன.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி அரசும் வெளியுறவு அமைச்சகமும் இதுவரை நமது மீனவர்களைக் காக்க எடுத்த தூதரக நடவடிக்கைகள் என்ன? இலங்கை கடற்படையின் தொடர் அத்து மீறல்களைத் தடுத்து நிறுத்த மத்திய பாஜக அரசு எடுத்த ஆக்கப்பூர்வமான முயற்சிகள் என்ன? வெறும் தேர்தல் விளம்பரங்களையும் வெற்று அறிக்கைகளையும் மட்டுமே நம்பியிருக்கும் இந்த அரசு, தமிழக மீனவர் நலனில் காட்டும் மெத்தனம் எப்போது முடிவுக்கு வரும்?

மீனவர்கள்

தமிழ்நாட்டு மீனவர்களின் எதிர்காலத்தை இலங்கை வசம் அடகு வைத்துவிட்டு டெல்லி அரசு மவுனம் சாதிப்பதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது; இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது படகையும் உடனடியாக விடுவிக்க மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் துரிதமாகச் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com