

போலீஸ் ரோந்து பணியில் ஈடுபட்டு 3 பேரை பிடித்தனர். முனியாண்டி, முரளி, சின்னகாசிபாண்டியன் ஆகிய 3 பேரையும் கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சிவஞானபுரத்தைச் சேர்ந்தவர் காஞ்சி குமார் (வயது42). இவர் ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் சர்வேயராக பணியாற்றி வருகிறார்.
நிலக்கோட்டை அருகே உள்ள குண்டலப்பட்டி விநாயகபுரத்தைச் சேர்ந்த முனியாண்டி மனைவி தீபா (35)விற்கும் சர்வேயருக்கும் கடந்த ஓராண்டாக கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை முனியாண்டி குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இருந்தபோதும் அவர்களது பழக்கம் நீடித்து வந்துள்ளது.
நேற்று இரவு நிலக்கோட்டை அணைப்பட்டி ரோட்டில் மோட்டார் சைக்கிளில் காஞ்சிகுமார் வந்து கொண்டிருந்தார். முனியாண்டி மற்றும் அவரது உறவினர்கள் முரளி, சின்னகாசிபாண்டியன் ஆகிய 3 பேரும் சர்வேயரின் மோட்டார் சைக்கிளை வழி மறித்து தாக்கி வேறொரு பைக்கில் ஏற்றி கடத்தி வீலிநாயக்கன்பட்டி கரட்டு பகுதிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு வைத்து மேலும் 3 பேர் சேர்ந்து 6 பேரும் விடிய விடிய கடுமையாக சர்வேயர் காஞ்சிகுமாரை தாக்கியுள்ளனர். பின்னர் மோட்டார் சைக்கிளில் அவரை ஏற்றி கொண்டு வந்து நிலக்கோட்டையில் ஒரு இடத்தில் இறக்கிவிட்டு இதை வெளியே சொன்னால் உன்னை கொலை செய்து விடுவோம் என மிரட்டி சென்று விட்டனர்.
பலத்த காயம் அடைந்த காஞ்சிக்குமார் இது குறித்து தனது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் நிலக்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டியனிடம் புகார் கொடுத்தார். இரவோடு இரவாக போலீஸ் ரோந்து பணியில் ஈடுபட்டு 3 பேரை பிடித்தனர். முனியாண்டி, முரளி, சின்னகாசிபாண்டியன் ஆகிய 3 பேரையும் கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.