குடிபோதையில் ஆபாசமாக பேசியதால் கொன்றோம்- கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்

டாஸ்மாக் கடையில் மதுக்குடிக்க சென்றபோது ஜெகனுக்கும், எங்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
குடிபோதையில் ஆபாசமாக பேசியதால் கொன்றோம்- கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்
Published on: 
Summary

கைது செய்யப்பட்ட மீனாட்சி சுந்தரம், நாகசுதன், பிரம்மநாயகம் ஆகிய 3 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர். சுபாகரன் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி மிஷின் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் ஜெகன்(வயது42). கட்டிட தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் பொய்கை குளத்தின் படித்துறையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் ஜெகனை கொன்றது ஆரல்வாய்மொழி வடக்கூரை சேர்ந்த மீனாட்சி சுந்தரம், வடக்கு பெருமாள்புரத்தை சேர்ந்த நாகசுதன்(28), அழகியநகர் பகுதியை சேர்ந்த சுபாகரன் (29), மருத்துவர் நகர் பகுதியை சேர்ந்த பிரம்மநாயகம்(26) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனாட்சிசுந்தரம் போலீசாரிடம் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-

டாஸ்மாக் கடையில் மதுக்குடிக்க சென்றபோது ஜெகனுக்கும், எங்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது ஜெகன் எங்களை ஆபாசமாக பேசினார். இதனால் எங்களுக்குள் மோதல் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் எங்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

பொய்கை குளம்

சம்பவத்தன்று நாங்கள் பொய்கை குளம் பகுதிக்கு மது குடிப்பதற்காக சென்றோம். அங்கு ஜெகன் இருந்தார். அப்போது அவர் என்னிடம் வந்து, ‘ஏற்கனவே நடந்த சம்பவத்தை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்’ என்று கூறினார். பின்னர் நாங்கள் ஒன்றாக மது அருந்தினோம்.

அப்போது டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக நான் அவரிடம் கேட்டேன். உடனே ஜெகன் மீண்டும் என்னை ஆபாசமாக திட்டினார். அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், ஜெகன் வைத்திருந்த அரிவாளை எடுத்து அவரை வெட்டினோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கைது

கைது செய்யப்பட்ட மீனாட்சி சுந்தரம், நாகசுதன், பிரம்மநாயகம் ஆகிய 3 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர். சுபாகரன்

உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com