கோயம்பேடு மார்க்கெட்டில் டிரைவரிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது

கோயம்பேடு மார்க்கெட்டில் டிரைவரிடம் செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயம்பேடு மார்க்கெட்டில் டிரைவரிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது
Published on: 
Summary

கோயம்பேடு பழ மார்க்கெட்டுக்கு வந்தார். பின்னர் இருவரும் லாரியின் மேல் ஏறி தூங்கினர். காலையில் எழுந்தபோது 2 பேரின் செல்போன்களும் திருடுபோய் இருந்தன.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் கைலாஸ் ஞானோபா. லாரி டிரைவர். இவர் நண்பர் ஒருவருடன் லாரியில் சீத்தாப் பழங்கள் ஏற்றிக் கொண்டு கோயம்பேடு பழ மார்க்கெட்டுக்கு வந்தார். பின்னர் இருவரும் லாரியின் மேல் ஏறி தூங்கினர். காலையில் எழுந்தபோது 2 பேரின் செல்போன்களும் திருடுபோய் இருந்தன.

போலீசார் விசாரணை

இதுகுறித்த புகாரின் பேரில் கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து செல்போன்களை திருடி சென்ற நெற்குன்றம் பகுதியை சேர்ந்த சந்திரன்(39) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

X