அம்பத்தூர் அருகே 14 கிலோ கஞ்சாவுடன் வடமாநில வாலிபர்கள் கைது

2 பேரையும் போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அம்பத்தூர் அருகே 14 கிலோ கஞ்சாவுடன் வடமாநில வாலிபர்கள் கைது
Published on: 

அம்பத்தூர் மார்கெட் ரோடு, வெங்கடாபுரம் அருகே மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றிய 2 வடமாநில வாலிபர்களிடம் சோதனை செய்தபோது 14 கிலோ கஞ்சா கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

கைது

விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுனில்கோடிகா (23), அல்லியா பெஹேராமாஜி(20) என்பது அவர்கள் கஞ்சாவை ஒடிசா மாநிலத்தில் இருந்து விற்பனைக்காக வாங்கி வந்ததும் தெரிய வந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com