பொன்னேரியில் ரூ.1.47 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது

சட்டக் கல்லூரியில் சீட்டு வாங்கி தருவதாக கூறி அபினேஷிடம் கடந்த ஏப்ரல் மாதம் ரூ. 1 லட்சத்து47 ஆயிரம் பெற்றுள்ளார்.
பொன்னேரியில் ரூ.1.47 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது
Published on: 
Summary

அபினேஷ் கொடுத்த புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் வழக்கு பதிந்து சாமுவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பொன்னேரி அடுத்த ஆலாடு பகுதியைச் சேர்ந்தவர் அபினேஷ். இவருக்கும் சென்னை பட்டினப்பாக்கம் பகுதியை சேர்ந்த சாமுவேல் (வயது 29) என்பவருக்கும் இடையே நட்பு இருந்தது.

ஆந்திர மாநிலம் சட்டக் கல்லூரி

இந்த நிலையில் சாமுவேல் ஆந்திர மாநிலம் சட்டக் கல்லூரியில் சீட்டு வாங்கி தருவதாக கூறி அபினேஷிடம் கடந்த ஏப்ரல் மாதம் ரூ. 1 லட்சத்து47 ஆயிரம் பெற்றுள்ளார்.

பொன்னேரி போலீசார்

ஆனால் சொன்னபடி சீட் வாங்கி கொடுக்கவில்லை. இதனால் அபினேஷ் கொடுத்த புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் வழக்கு பதிந்து சாமுவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது குறித்து பொன்னேரி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com