தமிழக அரசின் டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது.இணையதளத்திலிருந்து இவ்விருதுக்கான விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
TN Govt
Published on

சென்னை:

தமிழ்நாட்டில் பட்டியல்இன மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பலர் அரிய தொண்டாற்றி வருகிறார்கள். பட்டியல் இனமக்களின் முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்துக்கொண்டு அவர்கள் ஆற்றிவரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது.

அவ்வகையில் 2024 ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் தங்களைப் பற்றிய முழுவிவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். www.tn.gov.in/ta/forms/Deptname/1 என்ற இணையதளத்திலிருந்து இவ்விருதுக்கான விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஆதிதிராவிடர் நல இயக்குநர் அலுவலகம். சென்னை-05 அல்லது சம்மந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com