தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் மஞ்சள் எச்சரிக்கை- வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு பருவமழை வழக்கத்திற்கு முன்பாகவே தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் மஞ்சள் எச்சரிக்கை- வானிலை ஆய்வு மையம்
Published on

தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அந்தமான் தீவுப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்குகிறது.

அந்தமானில் இன்று தொடங்கும் தென்மேற்கு பருவமழை மே 26ஆம் தேதிவாக்கில் கேரள நிலப்பரப்பில் தொடங்குகிறது.

இந்தியாவின் மிக முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் தென்மேற்கு பருவமழை வழக்கத்திற்கு முன்பாகவே தொடங்குகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 7 முதல் 11 செ.மீ வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com