முன்னாள் அமைச்சர்கள்மீது வழக்குப்பதிய அனுமதி அளிக்காத ஆளுநருக்கு எதிராக ஆதவ் அர்ஜூனா பேசுவாரா? - எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி!

இடைத்தேர்தல் நெருங்க நெருங்க தவெக - இடதுசாரிகள் இடையேயான சலசலப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.
முன்னாள் அமைச்சர்கள்மீது வழக்குப்பதிய அனுமதி அளிக்காத ஆளுநருக்கு எதிராக ஆதவ் அர்ஜூனா பேசுவாரா? - எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி!
Published on

தமிழ்நாட்டில் இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தல் நெருங்க நெருங்க தவெக அமைச்சர்கள், தாங்கள் ஆட்சியமைக்க ஆதரவு அளித்த இடதுசாரிகள்மீது விமர்சனங்களை வீசிவருகின்றனர்.

இடதுசாரிகளும் நாங்கள் ஆதரவு மட்டுமே தந்துள்ளோம், கூட்டணியில் இல்லை. தவெக அரசின் தவறுகளை நிச்சயம் சுட்டிக் காட்டுவோம் என கூறிவருகின்றனர். இருதரப்பினருக்கும் இடையே தற்போது சலசலப்பு அதிகரித்து வரும் நிலையில், எம்.பி. சு. வெங்கடேசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின், “திமுக ஆட்சியில் இடதுசாரிகள் ஊழலுக்கு எதிராக பேசவில்லை” என்ற குற்றச்சாட்டு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய அவர்.,

“ஊழலுக்கு எதிராக எல்லா காலங்களிலும் நெஞ்சை நிமிர்த்தி அரசியல் செய்பவர்கள் கம்யூனிஸ்டுகள். ஊழலுக்கு எதிராக தவெக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாங்கள் ஆதரவாக, உறுதுணையாக இருப்போம்.

அமித்ஷாவுக்கு எதிராக பேசுவார்களா?

முன்னாள் அமைச்சர்கள்மீது வழக்குப்போட அனுமதி அளிக்காமல் இருப்பவர் ஆளுநர். நெஞ்சை நிமிர்த்து கொண்டு பேசும் ஆதவ் அர்ஜூனா, ஆளுநரின் இந்த நடவடிக்கை குறித்துப் பேசுவாரா? உள்துமை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக பேசுவார்களா? பேசவேண்டும். அதுதான் ஊழலுக்கு எதிரான முழுமையான நடவடிக்கை.

தவெக நிறுத்தியிருக்கும் இரண்டு வேட்பாளர்களும் என்றாவது ஊழலுக்கு எதிராக பேசியுள்ளார்களா? ஆனால் கம்யூனிஸ்டுகள் சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் தோழர் சுகந்தி, லட்சுமணன் வாழ்க்கை முழுவதும் ஊழலுக்கு எதிராக பேசியவர்கள்.

ஊழலுக்கு எதிரான அரசியல் பக்கம் ஆதவ் அர்ஜூனா நிற்கிறார் என்றால், இடதுசாரி வேட்பாளர்களை ஆதரிக்கும் முடிவை நீங்கள் எடுக்கவேண்டும். அதுதான் ஊழலுக்கு எதிராக துணிந்து நிற்பது. ” என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com