

ஆந்திரா பாணியில் ஆட்சி கவிழ்ந்துவிடுமோ என்ற பயத்தில் பொதுப்பணித்துறை ஆதவ் அர்ஜூனாவையும், லண்டன் பயணத்திற்கு அழைத்துச் செல்கிறீர்களா? என முதலமைச்சர் விஜய்க்கு, முன்னாள் தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;
“தவெக ஆட்சி அமைந்த 100 நாட்களுக்குள் மக்களின் கோபம், இளைஞர்களின் அதிருப்தி, பெண்களின் சாபம், விவசாயிகளின் கண்ணீர், அரசு ஊழியர்களின் ஆவேசம் ஆகியவற்றால் செல்வாக்கு சரிந்து வருவதை உணர்ந்து,
இடைத்தேர்தலில் பழைய பருப்பு வேகாது என்பதற்காக உங்களால் “கல்லாப்பெட்டிகூட்டணி” என்று வர்ணிக்கப்பட்ட கட்சிகளை அழைத்து “மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக்கூட்டணி” என்று பெயர் மாற்றம் செய்ததாலேயே மக்களின் செல்வாக்கை பெற்றுவிடலாம் என்று கனவு காணாதீர்கள் முதலமைச்சர் சார்?
நேற்று தங்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் முடிந்த பின்பு கூட்டத்தின் நோக்கம் குறித்தோ, பிரதமர் வேட்பாளர் குறித்தோ, இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்தோ பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேச துணிவில்லாமல், கூட்டணி கட்சித்தலைவர்கள் தங்கள் விருப்பப்படி கருத்து சொல்லிக் கொள்ளுங்கள் என்று அவர்களை அவமதித்திருப்பது, உங்கள் “நரித்தனத்தின் வெளிப்பாடு” என்பது நாட்டுமக்களுக்கு நன்றாக தெரியும் முதலமைச்சர் சார்?
இந்தியாவில் அரசியல் அமைப்புச் சட்டம், பத்திரிகை சுதந்திரம், கருத்து சுதந்திரம் மக்களின் உரிமைகளுக்கு எதிராக இந்திரா காந்தியால் கொண்டுவரப்பட்ட நெருக்கடி நிலையை அன்றைய முதலமைச்சர் கருணாநிதி எதிர்த்து குரல் கொடுத்ததால் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டு சிறையில் சித்திரவதை அனுபவித்த தியாக வரலாற்றை சட்டமன்றத்தில் கேலி செய்து கூத்தடிக்கும் பண்பில்லா, அறிவில்லா, நாகரிகமில்லா, கூத்தாடிக்கு முதலமைச்சர் பதவி ஒரு கேடா ?
ஒருமுறை ஆந்திர முன்னாள் முதலமைச்சர் மறைந்த என்.டி.இராமராவ் வெளிநாடு பயணம் சென்று திரும்புவதற்குள் சந்திரபாபு நாயுடு ஆட்சியை கவிழ்த்து முதலைமைச்சர் ஆனது போல்
ஆதவ்அர்ஜூனா முதலமைச்சராகி விடக்கூடாது என்ற பயத்தில் உங்களோடு லண்டன் அழைத்து செல்கிறீர்களா முதலமைச்சர் சார்?” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.