இடைத்தேர்தலில் பாமகவின் ஆதரவு யாருக்கு?- அன்புமணி விளக்கம்

லண்டன் சென்று முதலமைச்சர் விஜய் போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இங்கேயே செய்திருக்கலாம்.
Anbumani ramadoss
Published on
Summary

தமிழகத்தில் வரும் ஆக்போடர் 6ம் தேதி நடைபெறும் 2 தொகுதி இடைத்தேர்தலில், பாமகவின் ஆதரவு கோரி தவெக, திமுக, அதிமுக உங்களை அணுகியதா என்கிற கேள்விக்கு அன்புமணி ராமதாஸ் பதில் அளித்துள்ளார்.

சென்னை கிண்டியில் பாமக தலைவர் அன்புமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

முதலமைச்சர் லண்டன் பயணம்

லண்டனில் முதலமைச்சர் ஒப்பந்தம் செய்த நிறுவனம் சென்னையில் 30 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

லண்டன் சென்று முதலமைச்சர் விஜய் போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இங்கேயே செய்திருக்கலாம்.

புதிய தலைமை செயலகம்

பட்டினபாக்கத்தில் தலைமை செயலகம் கட்டும் முடிவு மிக மிக தவறானது. அதனை தமிழக அரசு கைவிட வேண்டும்.

பட்டினப்பாக்கம் ஒரு குறுகிய பகுதி. சென்னைக்கு வெளியில் ஆயிரம் ஏக்கரில் நிர்வாக நகரம் அமைக்கலாம்.

இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு?

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாது.

இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.

பரந்தூரில் விமான நிலையத்திற்கு பதில் சிப்காட் வந்தால் சுற்றுச்சூழல் பாதிக்காதா?

பரந்தூரில் எந்த தொழிற்பேட்டையும் அமைக்கக்கூடாது, அப்படி அமைக்க நினைத்தால் நானே போராடுவேன்.

மக்களுக்கு திமுக, அதிமுகவை பிடிக்கவில்லை, அதனால்தான் முதல்வராக விஜயை மக்கள் தேர்வு செய்துள்ளனர்.

மீண்டும் மீண்டும் பழைய அரசை பழி சொல்வதை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வ நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

நீங்கள் அவர்களை குறை சொல்வது, அவர்கள் உங்களை குறை சொல்வதும் போதும், மக்கள் குறைகளை களைய நடவடிக்கை எடுங்கள்.

வேலையில்லா திண்டாட்டம், நீர் மேலாண்மை, விவசாயிகளின் துன்பத்தை போக்க நடவடிக்கை எடுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com