ஆபாச நதி, வன்ம நதி.. இரட்டை அர்த்த பேச்சு பற்றி சட்டசபையில் பொங்கிய முதலமைச்சர் விஜய்

தமிழ்நாட்டில் ஆபாச நதியாக ஓடுகிறது. வன்ம நதியாக ஓடுகிறது.
விஜய்
விஜய்
Published on
Summary

சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நிறைவடைந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் இன்று பதில் அளித்துள்ளார்.

அவையில் முதலமைச்சர் விஜய் தனது பதிலுரையில்,

"பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் உறுப்பினர்கள் வைத்த கருத்துக்கள் பரிசீலித்து முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

குற்றத்தில் சிக்கக்கூடிய இளைஞர்கள் குற்றவாளிகளாக மாறுவதற்கு முன்பே காப்பாற்றக்கூடிய சமூக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டில் மக்கள் அச்சமின்றி வாழவேண்டும் என்பதும் ஊழலற்ற நிர்வாகம் இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.

கருத்துரிமை, பேச்சுரிமை என்பதை பற்றி நாம் யோசிக்க வேண்டும். அரசியல் ரீதியாக எந்தக் கருத்துகளையும் கூறலாம். ஆனால் தனிப்பட்ட தாக்குதல்கள் பேசக் கூடாது. ஆர்த்தோ சர்ஜன் போல பேரவைக்குள்ளேயே எலும்பை உடைப்பேன் என்று ஒரு எம்.எல்.ஏ. பேசுகிறார். சட்டப்பேரவையில் எலும்பை உடைப்பேன் என்று பேச்சு எதற்கு இதுதான் அரசியலா? இப்படிப் பேசி பேசித்தானே, இன்று அந்தப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறீர்கள்.

தி.மு.க.வினருக்கு அறிவுரை கூற நான் வரவில்லை. மற்றொரு சட்டப்பேரவை உறுப்பினர் கூறுகிறார், தி.மு.க.வுக்கு வாக்களிக்காதவர்களுக்கு நல்ல சாவே வராது என்று கூறுகிறார். மக்களின் தீர்ப்பை ஏற்காத நீங்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும்.

இது குறித்துக் கேட்டால், அரசியலில் பல காலமாக இருப்பவர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால், நாங்கள் அந்தக் காலத்தில் பேசாத பேச்சா என்று கேட்கிறார்கள்.

அரசியலுக்காக தனிப்பட்ட முறையில் மக்களையும் பெண்களையும் தரம் தாழ்ந்து பேசுவது வேண்டாம் என்பது எனது வேண்டுகோள். சமீப காலமாக தமிழ்நாட்டில் ஆபாச நதியாக ஓடுகிறது. வன்ம நதியாக ஓடுகிறது. இதை மக்கள் பார்க்கிறார்கள்.

பெண்களை பற்றி அவதூறாக அசிங்கமாக இரட்டை அர்த்தத்தில் பேசுவதை பெண்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். நம் வீட்டில் இருப்பதும் அதே பெண்கள் தான் என்பதை மனதில் வைத்து பேச வேண்டும்.

மக்கள் எனக்கு இதற்கு முன் கொடுத்த இடமும், தற்போது கொடுத்த இடமும் கிடைக்க காரணம் நம் வீட்டு பெண்கள் தான். எனவே பெண்களை பற்றி அவதூறாக அசிங்கமாக பேசினால் சட்டம் தன் கடமையை செய்யும்.

இது அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று நினைத்தால் நான் பொறுப்பல்ல. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இதே சட்டசபையில் இதே எதிர்கட்சியால் எவ்வளவு அவமானங்களை சந்தித்தார் என்பதை நாம் கேள்விபட்டியிருக்கிறோம். எனவே வருங்காலத்தில் பெண்களுக்கு அதுபோல நடந்துவிட கூடாது." என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com